வருங்கால போலீஸ்

சென்ற வாரம் RTO ஆபீசுக்கு சென்றிருந்தேன். தேர்வை முடித்துவிட்டு புகைப்படம் எடுப்பதற்காக காத்திருந்த போது ஒருவரை சந்தித்தேன். அவருக்கும் பேசுவதற்கு யாரும் இல்லை, நானும் தனியே இருந்ததனால் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.  வேற வழி ? விசாரித்ததில் இப்பொழுது லைசன்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டிக் கொண்டிருப்பதும், அதனால் லைசன்ஸ எடுப்பதற்காக வந்திருப்பதாகவும் தெரியவந்தது. மேலும் தன்னை பற்றி சொல்லத் தொடங்கினார். போலிசில் சேருவதற்கு முயற்சித்து வருவதாக கூறினார். ச்ச பரவாயில்லியே என்று பேச்சைத் தொடர்ந்தேன்.  “சரி வேலைக்கு சேருவதற்கு பணம் கேட்பாங்கலே” என்றேன். அதற்கு அவர் சொன்ன பதில் நன்றாக இருந்தது.

“ஆமா கேட்பாங்க. அனால் வேலைக்கு சேர்ந்த உடனே சம்பாதிச்சுரலாம்ல. இரண்டு மாசத்துல எல்லாத்தையும் முடிச்சுரலாம். அப்பறம் என்ன பிரச்சனை. எனக்கு தெரிஞ்சவர் ஒருத்தர் போலீஸ்ல இருக்காரு. அவர் எங்க போனாலும் காசே கொடுக்கமாட்டாரு. நான் இந்த ஊர் போலீஸ் அப்படி இப்படினு முடிச்சுருவாரு. கடைக்காரனும் ஒன்னும் கேட்கமாட்டான், நம்மகிட்ட தான் துள்ளுவான்” என கூறி முடித்தார். என்ன சொல்வது என தெரியவில்லை சும்மா ஒரு சிரிப்பை சிரித்துவிட்டு வந்துவிட்டேன்.

Advertisements

Tagged:

One thought on “வருங்கால போலீஸ்

  1. Senthil 3:19 பிப இல் மே 2, 2009 Reply

    Enna Seivathu, ithuthan naam vaalum nadu.
    Sorry boss, i can’t know how to write in tamil here.

    I am also created a blog for Tamil Movie Reviews at http://tamilmoviereviewsnewstrailers.bfora.com/, if you have time please read …also http://tamilnadu2009.bfora.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: