Posts filed under 'வாழ்க்கை'
திக் திக் திக்
தெரியாமல் இந்த இடத்தில் வந்து மாட்டிக்கொண்டோமோ என்ற எண்ணம் அப்பொழுது தான் செந்திலாகிய எனக்கும் செந்திலுக்கும் வந்தது. அப்படி ஒரு கும்மென்ற இருட்டை நாங்கள் பார்த்ததில்லை. நம்ம கண்ணுக்கு ஏற்கனவே நல்ல பவரு, இதுல இந்த இருட்டு வேற, விளங்கின மாதிரி தான் என்று நினைத்துக் கொண்டேன். வெளியே செல்லும் வழி தெரியவில்லை, ஆனால் என்னிடம் இருந்த தைரியமோ எப்படியோ வழியைக் கண்டுபிடித்து ஸ்டாப் கியர் போட்டு பறந்துவிட்டது. “மாப்பு வைச்சுடான்டா ஆப்பு” என்ற டயாலாக்குடன் நடக்க ஆரம்பித்தோம். இரண்டு அடிகள் தான் எடுத்து வைத்திருப்போம் அருகில் யாரோ அலருவது போன்று தோன்றியது, உரைந்து போய் நின்றோம். நடக்கவே ஆரம்பிக்கவில்லை, நகர மறுத்தன கால்கள். சரி நம்ம தான் பயப்படுகிறோம் நம்ம கூட வந்த பையன் தைரியசாலி என்று நினைத்தால் அப்பொழுது தான் தெரிந்தது ஆள் சைஸ் தான் பெரிசு மத்தபடி எல்லாம் ஒரே குட்டைல ஊரின மட்டைதான் என்று புரிந்தது. இரண்டு அடி எடுத்து வைத்தோம், ஏதோ ஒரு துணி முகத்தில் பட்டது போன்ற தோன்றவே போட்டோம் ஒரு சடன் ப்ரேக். வியர்த்து ஊத்த ஆரம்பித்துவிட்டது. “என்ன கொடுமை சார் இது” வந்த வழியாகவும் செல்ல முடியவில்லை, முன்னேறி செல்லவும் முடியவில்லை, அந்த இடத்திலே நிற்கவும் முடியவில்லை. என்ன செய்வது ? தலைநகரம் வடிவேலின் கால்கள் போல நடுங்கி கொண்டிருந்தன செந்திலின் கால்கள், என்னோடது இல்லீங்க அருகில் இருந்த நண்பன் செந்திலின் நிலமை இது. சரி நீங்க என்ன பண்ணிட்டு இருந்திங்கனு கேட்கலாம், இந்த கேள்விக்கு பதில் வந்து “பாஸ்”. சரி “எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ணமாட்டோமா” என்று எங்களை நாங்களே தேற்றி கொண்டு மேலும் நடந்தோம். “டேய் என்னடா அங்க இருக்கது”னு கேட்டான் செந்தில். “டேய் ஏன்டா உங்க தாத்தா சட்டை இல்லாம ஆடுர மாதிரி இருக்கு” என்றேன். “ஒழுங்கா பாருடா” என்றான் செந்தில். “டேய் அது தான் எழும்புக்கூடா டா” என்று கேட்டுக்கொண்டே அவனை பார்த்தேன், பார்த்தால் பையன காணோம். நாலு கால் பாய்ச்சலில் பாய்ந்து ஓடிக் கொண்டு இருந்தான். இவனல்லவோ நண்பன் என்று மெச்சிக் கொண்டு, மெதுவாக நடக்க ஆரம்பித்தேன். சரி சரி ஓகே, ஓட ஆரம்பித்தேன். கடைசியில் ஒரு சிறிய ஓட்டை வழியாக லைட் வருவது தெரிந்தது. அடித்து பிடித்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று வெளியே வந்து நின்றோம். அட்ஜஸ்ட் பண்ணிவிட்டு வீரட்கள் போல போஸ் கொடுக்க எண்னிணோம், ஆனால் பார்த்து சிரிப்பதற்கு ரெடியாக இருந்தனர் இருபது பேர்.
எங்கிருந்து வராங்கனு தெரியல, இதுக்கு மட்டும் கரெக்டா வந்துராங்க என்று நொந்துக் கொண்டு அந்த இடத்தைவிட்டு நகன்றோம்.
இன்று செந்திலோடு தொலைபேசியில் பெசிய பொழுது ஒரு வருடத்திற்கு முன்பு “ஸ்கேரி ஹவுசில்” நடந்தவை கண் முன்னே வந்து விட்டு சென்றன, அது தான் நீங்கள் மேலே படித்தது. இன்றைய தீர்மானம், ஓசியா கூப்பிட்டா கூட இனி அந்த பக்கம் தலை வைச்சு படுக்க மாட்டோம்.
Add comment நவம்பர் 12, 2008
இயற்கையின் மடியில் இரண்டு நாட்கள்
வெகு நாட்களுக்கு பிறகு சென்ற வாரம் மறுபடியும் ஒரு சுற்றுலாவுக்கு சென்றோம். இந்த முறை வடமேற்கு கர்நாடகத்தை சுற்றி பார்க்க எண்ணி, ஜோக் நீர்வீழ்ச்சி, முருதேஷ்வர் மற்றும் கோகர்னா என்று திட்டம் போட்டுக் கொண்டு கிளம்பினோம். எதிர்பார்த்ததை விட சூப்பராக இருந்தது இந்த சுற்றுலா. இரண்டு நாட்கள் மேற்கு தொடர்ச்சி மலைகளின் மடியிலே தான் தவழ்ந்தோம். முதலில் சென்றது ஜோக் நீர்வீழ்ச்சிக்கு தான். அதிகமாக நீர் இல்லை, அதுவும் ஒரு வகையில் நன்றாகவே இருந்தது. நீர்வீழ்ச்சியின் அடிமட்டம் வரை சென்று பார்க்க முடிந்தது. 920 அடி கீழே இறங்கி செல்வது கொடுமையாக தான் இருந்தது, இருந்தாலும் ஒரு ஆர்வத்தில் இறங்கிவிட்டோம். ஏறும் போது திண்டாட்டம் ஆகிவிட்டது. கொஞ்ச நேரம் அங்கே ஆட்டம் போட்டுவிட்டு முர்தேஷ்வர் நோக்கி வண்டி சென்றது. மாலையில் அங்கே ஒரு அழகான ஹோட்டலில் ரூம் கிடைக்கவே சந்தோஷமாக சென்றோம் கடற்கரைக்கு. அங்கே சின்ன டென்னிஸ் பந்து ஒன்று வாங்கி, கால்பந்து விளையாட ஆரம்பித்தோம். ஆடிய அரை மணிநேரமும் விறுவிறுப்பாக சென்றது ஆட்டம். கடைசியில் ஆட்டம் 2-2 என்று சமநிலையில் முடிந்தது. அன்று இரவு நித்திரை என்னும் யாத்திரையில் அனைவரும் மூழ்க்கி இருந்ததால் எப்பொழுதும் ஆடும் சீட் ஆட்டம் ஆட முடியவில்லை.
அடுத்த நாள், கோகர்னா போவதற்கு நேரம் இல்லை என்பதால், சிரிங்கேரி மற்றும் கொல்லூர் பார்த்துவிட்டு ஊருக்கு திரும்பிவிடலாம் என எண்ணீக் கொண்டு கிளம்பினோம். இரண்டு கோயில்கலும் அழகாக இருந்தன. சொல்ல வேண்டிய விசயம் என்னவென்றால், வண்டி சென்ற பாதை தான். ஓரு நாள் முழுதும் மலை மீது தான் பயனம். கொஞ்சம் பயமாக இருந்தாலும், சுற்றி பச்சை போர்வை போத்தியது போல இருந்த மரங்கலும், 180 டிகிரி வளைவுகளும் ரசிக்க வைத்தன. மனிதர்களை அவ்வளவாக பார்க்க முடியவில்லை, வெறும் மலைகளும், மரங்களும், மேகங்கலும் தான் கண்ணுக்கு எட்டிய தூரம் வரைத் தெரிந்தது. வரும் வழியில் “ஆகும்பே” என்னும் இடத்தில் உள்ள சில சில இடங்களையும் பார்த்துவிட்டு வந்து சேர்ந்தோம். வடக்கு கர்நாடகம், பெங்களூருக்கு நேர் மாறாக இருந்தது. ஆங்காங்கே வீடுகள், வீட்டை சுற்றி மரங்கள், நதியில் குதித்து விளையாடும் மீன்கள் என இயற்கையோடடு ஒன்றி இருந்தது வியப்பாகவும், சந்தோசமாகவும் இருந்தது.
Add comment அக்டோபர் 11, 2008
பொற்காலம்
சுற்றி திரிந்தேன் சுதந்திரமாக
கல்லூரி என்னும் கூட்டுக்குள்
செய்யாத சேட்டைகள் இல்லை
குறும்புகள் குற்றம் இல்லை
இருந்தது வகுப்பறையில்
கேட்டதோ நண்பர்களின் காதல் கதைகள்,
படித்தது பரீட்ச்சைக்கு முன்னால்
மதிபெண் கண்டு வருந்தியதில்லை பின்னால்
துயரங்கள் கண்டு துவண்டதில்லை
நண்பர்கள் என்றும் பிரிந்ததில்லை
மரத்தடி பேச்சுகள் மறக்கவில்லை
இறக்கும் வரை அழிய போவதுமில்லை
எல்லாம் நடந்தது அன்று
நினைவில் கலந்து நிற்கின்றன இன்று
நிற்கும் என்றென்றும்
1 comment மார்ச் 28, 2008
மனதில் தோன்றியது
பட்டாம் பூச்சியாக பிறந்திருந்தால்,
சுற்றி திறிந்திருப்பேன்,
மலர்களில் தேன் உண்று
பறவையாக பிறந்திருந்தால்,
பறந்து திறிந்திருப்பேன்,
உலகம் முழுவதும்.
ஈசலாக பிறந்திருந்தால்,
இறந்தாவது போயிருப்பேன்,
ஒரே நாளில்
மனிதனாக பிறந்துவிட்டேன்,
கவலை இல்லாமல் எப்படி வாழ்வது என நினைத்து,
கவலை அடைந்து கொண்டிருக்கிறேன்..
Add comment நவம்பர் 3, 2007
சூழ்ச்சி
இறந்த காலம் அழகாக இருக்கிறது
இருந்தும் செல்ல முடியவில்லை
காலத்தின் சுழ்ற்சி என்கின்றனர்
சூழ்ச்சி போன்றே தோன்றுகிறது.
Add comment அக்டோபர் 27, 2007