Posts filed under 'வரலாறு'

வல்வில் ஓரி

வல்வில் ஓரி கொல்லிமலையில் ஆட்சி புரிந்த சோழர் காலத்து குறுநில மன்னர்களில் ஒருவன். பொன்னியின் செல்வனில் கல்கி வல்வில் ஓரியை பற்றியும், அவரது வில் வித்தையின் மேன்மை பற்றியும் விளக்கி இருக்கிறார். ஓரி ஒரே அம்பினால் யானை, புலி, மான், பன்றி மற்றும் உடும்பு ஆகியனவை வீழ்த்தும் திறமை படைத்தவன் என்று கூறுகிறது வரலாறு. பிறகு மலையமானுடனும் நடந்த யுத்தத்தில் வீர மரனம் அடைகிறான். பொன்னியின் செல்வன் கதையில், மலையமானுடைய சரித்திரத்தை பற்றி சொல்லும் போது, வல்வில் ஓரி பற்றிய வரலாற்றுக் குறிப்பும் வருகிறது. கொல்லிமலை சென்ற போது, பராமரிப்பு இல்லாமல் கிடந்த வல்வில் ஓரிக்கு அரசால் நிறுவப்பட்ட சிலையை என் கேமராவுக்குல் அடைத்து கொண்டுவந்தேன். இதோ உங்கள் பார்வைக்கு,

Valvil Ori

Valvil Ori

1 comment நவம்பர் 12, 2008

பொன்னியின் செல்வன்

கல்கி எழுதிய “பொன்னியின் செல்வன்” கதை பற்றி ஒரு வருடத்திற்கு முன்பு வரை அதிகமாக கேட்டது கிடையாது. ஆனால் ஒரு வருடமாக “பொன்னியின் செல்வன்” பற்றி எதாவது ஒரு வகையில் செய்தி வந்துக் கொண்டே இருந்தது. “பொன்னியின் செல்வன்” ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய புத்தகம், என் நண்பன் இந்தக் கதையை 5 முறை படித்துள்ளான் என்பது போன்ற செய்திகளை கேட்கும் பொழுது, ஆர்வம் கடல் அலையாக பொங்கி அமைதி பெறும். சரி என்ன தான் இருக்கிறது என்று வாங்கி படித்து பார்ததேன், அடக்க முடியாத கோபம் வந்தது. யார் மேல ? என் மேலே தான். இவ்வளவு நாள் இந்த புத்தகத்தை பற்றி தெரிந்துக் கொள்ளாமல் இருந்துவிட்டோமே என்று தான். முதல் பாகம் படிக்க ஆரம்பித்தது தான் அதன் பிறகு ஆர்வத்தை அடக்க முடியவில்லை, கட கடவென ஆறு பாகங்களையும் முடித்துவிட்டேன். தென்றல் போல தொடங்கிய ஆர்வம், சிறுது சிறுதாக சுளிக்காற்றை போல பலம் பெற்று அதிகரிக்க தொடங்கியது. அதானல் ஒரே ஒரு சேதம் தான், சில இரவுகளின் தூக்கம் தான். ஆனால் அது ஒன்றும் பெரிதே இல்லை. இப்படி ஒரு கதையை படித்து முடித்ததே போதுமானது. தமிழ் நாட்டின் வரலாற்றை இவ்வளவு தெளிவாக இது வரை நான் படித்தது இல்லை.

எத்தனையோ நபர்கள் கல்கியை பாராட்டி இருந்தாலும் என் பங்குக்கு நான் ஏதாவது சொல்ல வேண்டாமா என்ன ? கல்கி வரலாற்றையும் கற்பனையும் சேர்த்து அழகாக எழுதியிருக்கிறார். வாசிப்பவரின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை உணர்ந்து எழுதியது போல் இருந்தது. இதில் ஆங்காங்கே வரலாற்று செய்திகள் வேறு, தமிழ்நாட்டை பற்றி நமக்கு ஒன்றுமே தெரியவில்லையே என்ற எண்ணத்தை உருவாக்கிக் கொண்டே இருந்தன. இப்படி ஒரு நாவலை எழுதுவது கஷ்டம் தான். தன் தேவைக்கு ஏற்றது போல வரலாற்றையும் மாற்றி இருக்கிறார், ஆனால் படிக்கும் போது அதை பற்றி சிந்திப்பதற்கு அவர் வாய்ப்பு தருவதில்லை. “பொன்னியின் செல்வன்” புத்தகத்தின் சுவையை எதோடு ஒப்பிடுவது என்று யோசித்தேன், தேனோடு ஒப்பிடலாம் என்றால் ஒரு வரி கூட திகட்டவோ தித்திக்கவோ இல்லை, பாலோடு ஒப்பிடலாம் என்றால் தம்ழ் மரபு பின்பற்றபட்டு அதை விட தூய்மையாக இருந்தது.

“அலை கடலும் ஓய்ந்திருக்க, அகக்கடல் தான் பொங்குவதேன்” – என்ற நிலையில் தான் இப்பொழுது உள்ளம் உள்ளது. கதை படித்தாகிவிட்டது, ஆனால் மனமோ அமைதியில் இல்லை, வரலாற்றில் ஒரு விதமான புதுவித நாட்டத்தில் அலைபாய்ந்து கொண்டிருக்கிறது. இப்படி ஒரு கதை தமிழில் இருந்தது என்பதை அறியவில்லை, மீன்டும் ஒரு முறை படிக்காமல் இருக்க முடியுமா என்று தெரியவில்லை. இதுவரை இன்னொரு முறை படிக்க வேண்டும் என்று தோன்றிய ஒரே கதை, ஹாரி பாட்டர் கதைகள் தான். இப்பொழுது “பொன்னியின் செல்வன்” கதையில் இருக்கும் ஆர்வம் அதை மிஞ்சிவிட்டது.

அடுத்து படிக்க வேண்டியது பார்த்திபன் கனவும், சிவகாமியின் சபதமும் தான்.

2 comments அக்டோபர் 22, 2008


 

நவம்பர் 2009
தி செ பு வி வெ ஞா
« ஜூன்    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

அண்மைய இடுகைகள்

பக்கங்கள்

வகைகள்