Posts filed under 'என்னை பற்றி'

பூனாவில் பொங்கல்

ஒரு வாரம் லீவ் என்பதாலும், அக்காவின் குழந்தையைப் பார்க்க இதைவிட்டால் வேற நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது என்பதாலும், இந்த வருடம் பொங்கலை பூனேவில் கொண்டாட வேண்டும் என முடிவெடுத்து கொண்டாடியும் முடித்தாகிவிட்டது. 14 மணி நேர பயணம் இனிதாக இருந்தது, பயணத்தின் போது ஒரு விசயம் தெளிவாக தெரிந்தது. K.S.R.T.C யில் கன்னட படங்களை தவிர வேறு மொழி படங்கள் போடக் கூடாது என்பது தமிழ்நாட்டிற்கு செல்லும் பேருந்துகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பது தான். ஏனென்றால் நான் வந்த பேருந்தில் ஹிந்தி படமும் பாட்டும் தான் ஓடியது. சரி ஹிந்தி தான் கொஞ்சம் கொஞ்சம் பார்க்கலாம் என நினைத்தால், போன வாரம் பார்த்த அதே கஜினி. சரி என்ன செய்யலாம் என யோசித்து கொண்டிருக்கும் போது தான் அவளை கண்டேன். இரவு முழுவதும் அவளுடன் பேசுவதிலியே பொழுது சென்றது. நான் சொல்வது அனைத்தையும் கேட்டுக் கொண்டே இருந்தாள்.

சரி நம்ம பொங்கலுக்கு வருவோம். பொங்கல் சூப்பராக சென்றது. பூனாவில் நம்ம ஊர் ஐட்டங்கள் கிடைப்பது கஷ்டமாக இருந்தாலும் அலைந்து திரிந்து வாங்கி பொங்கலை கொண்டாடினோம். அப்பறம் வழக்கம்போல டிவியில் போட்ட படங்கள், நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டே பொழுது போனது. நிகழ்ச்சிகளில் கவனத்தில் நின்றது இரண்டு விசயங்கள், ஒன்று நடிகர் சிவகுமார் தன் புத்தகத்தை பற்றி பேசியது, மற்றொன்று சாலமான் பாப்பையா பட்டி மன்றம். சிவகுமார் காதலை பற்றி பேசிக் கொண்டிருந்தார். அவர் கூரியவற்றின் கருத்து என் மொழியில் பின் வருமாறு, “எல்லார்க்கும் டீனேஜ்ல ஒரு சுடர் உருவாகுது, அத ஒழுங்கா பயன்படுத்தினா இன்ஸ்டெய்ன் ஆகலாம் வாழ்க்கையில் நிறையா சாதிக்கலாம். ஆனால் டீனேஜில் வரும் காதலில் மாட்டிக் கொண்டால் எரிந்தும் போகலாம். டீனேஜில் வரும் காதல் ஆற்றில் உள்ள முதலையை போன்றது, யானையைக் கூட நீரில் இழுத்துக் கொன்றுவிடும். காதல் என்பது ஒன்றும் இல்லை இனவிருத்திக்கான ஒரு முதல் படி. ஆகவே இளைஞர்களே டீனேஜில் காதல் செய்யாதீர்கள், முதலில் உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள், பின்பு காதலை பற்றி சிந்தியுங்கள்”. சாலமான் பாப்பையாவின் பட்டி மன்றமும் கிட்டத்தட்ட இது போன்றே இருந்தது. என் கருத்தும் இந்த விசயத்தில் இதே போன்று இருந்ததனால் என்னை கவர்ந்தது. வேறு நிகழ்ச்சிகளை பற்றி பெரிதாக சொல்வதற்கு இல்லை. வழக்கம் போல தமிழ் தெரியாத நடிக நடிகைகள் தங்களுக்கு தெரிந்த தமிழிலும், தமிழ் தெரிந்த நடிகைகள் தமிழ் தெரியாதது போலவும் பேசி பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டிருந்தனர்.ஜனவரி 14ஐ தமிழ் வருடப்பிறப்பு என கலைஞர் அறிவித்து இருந்தாலும், யாரும் அதைக் கொண்டாடியது போல் தெரியவில்லை, நானும் தான்.

பின்குறிப்பு: சரி பேருந்தில் ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தேன் என்றேனே, யார் என்ற சந்தேகம் இன்னும் இருந்தால், கீழே வாசித்து தெரிந்துக் கொள்ளுங்கள், அது வேறு யாரும் இல்லை நிலா தான்.

Add comment ஜனவரி 15, 2009

திக் திக் திக்

தெரியாமல் இந்த இடத்தில் வந்து மாட்டிக்கொண்டோமோ என்ற எண்ணம் அப்பொழுது தான் செந்திலாகிய எனக்கும் செந்திலுக்கும் வந்தது. அப்படி ஒரு கும்மென்ற இருட்டை நாங்கள் பார்த்ததில்லை. நம்ம கண்ணுக்கு ஏற்கனவே நல்ல பவரு, இதுல இந்த இருட்டு வேற, விளங்கின மாதிரி தான் என்று நினைத்துக் கொண்டேன். வெளியே செல்லும் வழி தெரியவில்லை, ஆனால் என்னிடம் இருந்த  தைரியமோ எப்படியோ வழியைக் கண்டுபிடித்து ஸ்டாப் கியர் போட்டு பறந்துவிட்டது. “மாப்பு வைச்சுடான்டா ஆப்பு” என்ற டயாலாக்குடன் நடக்க ஆரம்பித்தோம். இரண்டு அடிகள் தான் எடுத்து வைத்திருப்போம் அருகில் யாரோ அலருவது போன்று தோன்றியது, உரைந்து போய் நின்றோம். நடக்கவே ஆரம்பிக்கவில்லை, நகர மறுத்தன கால்கள். சரி நம்ம தான் பயப்படுகிறோம் நம்ம கூட வந்த பையன் தைரியசாலி என்று நினைத்தால் அப்பொழுது தான் தெரிந்தது ஆள் சைஸ் தான் பெரிசு மத்தபடி எல்லாம் ஒரே குட்டைல ஊரின மட்டைதான் என்று புரிந்தது. இரண்டு அடி எடுத்து வைத்தோம், ஏதோ ஒரு துணி முகத்தில் பட்டது போன்ற தோன்றவே போட்டோம் ஒரு சடன் ப்ரேக். வியர்த்து ஊத்த ஆரம்பித்துவிட்டது. “என்ன கொடுமை சார் இது” வந்த வழியாகவும் செல்ல முடியவில்லை, முன்னேறி செல்லவும் முடியவில்லை, அந்த இடத்திலே நிற்கவும் முடியவில்லை. என்ன செய்வது ? தலைநகரம் வடிவேலின் கால்கள் போல நடுங்கி கொண்டிருந்தன செந்திலின் கால்கள், என்னோடது இல்லீங்க அருகில் இருந்த நண்பன் செந்திலின் நிலமை இது. சரி நீங்க என்ன பண்ணிட்டு இருந்திங்கனு கேட்கலாம், இந்த கேள்விக்கு பதில் வந்து “பாஸ்”. சரி “எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ணமாட்டோமா” என்று எங்களை நாங்களே தேற்றி கொண்டு மேலும் நடந்தோம். “டேய் என்னடா அங்க இருக்கது”னு கேட்டான் செந்தில். “டேய் ஏன்டா உங்க தாத்தா சட்டை இல்லாம ஆடுர மாதிரி இருக்கு” என்றேன். “ஒழுங்கா பாருடா” என்றான் செந்தில். “டேய் அது தான் எழும்புக்கூடா டா” என்று கேட்டுக்கொண்டே அவனை பார்த்தேன், பார்த்தால் பையன காணோம். நாலு கால் பாய்ச்சலில் பாய்ந்து ஓடிக் கொண்டு இருந்தான். இவனல்லவோ  நண்பன்  என்று மெச்சிக் கொண்டு, மெதுவாக நடக்க ஆரம்பித்தேன். சரி சரி ஓகே, ஓட ஆரம்பித்தேன். கடைசியில் ஒரு சிறிய ஓட்டை வழியாக லைட் வருவது தெரிந்தது. அடித்து பிடித்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று வெளியே வந்து நின்றோம். அட்ஜஸ்ட் பண்ணிவிட்டு வீரட்கள் போல போஸ் கொடுக்க எண்னிணோம், ஆனால் பார்த்து சிரிப்பதற்கு ரெடியாக இருந்தனர் இருபது பேர்.
எங்கிருந்து வராங்கனு தெரியல, இதுக்கு மட்டும் கரெக்டா வந்துராங்க என்று நொந்துக் கொண்டு அந்த இடத்தைவிட்டு நகன்றோம்.

இன்று செந்திலோடு தொலைபேசியில் பெசிய பொழுது ஒரு வருடத்திற்கு முன்பு “ஸ்கேரி ஹவுசில்” நடந்தவை கண் முன்னே வந்து விட்டு சென்றன, அது தான் நீங்கள் மேலே படித்தது. இன்றைய தீர்மானம், ஓசியா கூப்பிட்டா கூட இனி அந்த பக்கம் தலை வைச்சு படுக்க மாட்டோம்.

Add comment நவம்பர் 12, 2008

இயற்கையின் மடியில் இரண்டு நாட்கள்

வெகு நாட்களுக்கு பிறகு சென்ற வாரம் மறுபடியும் ஒரு சுற்றுலாவுக்கு சென்றோம்.  இந்த முறை வடமேற்கு கர்நாடகத்தை சுற்றி பார்க்க எண்ணி, ஜோக் நீர்வீழ்ச்சி, முருதேஷ்வர் மற்றும் கோகர்னா என்று திட்டம் போட்டுக் கொண்டு கிளம்பினோம். எதிர்பார்த்ததை விட சூப்பராக இருந்தது இந்த சுற்றுலா. இரண்டு நாட்கள் மேற்கு தொடர்ச்சி மலைகளின் மடியிலே தான் தவழ்ந்தோம். முதலில் சென்றது ஜோக் நீர்வீழ்ச்சிக்கு தான். அதிகமாக நீர் இல்லை, அதுவும் ஒரு வகையில் நன்றாகவே இருந்தது. நீர்வீழ்ச்சியின் அடிமட்டம் வரை சென்று பார்க்க முடிந்தது. 920 அடி கீழே இறங்கி செல்வது கொடுமையாக தான் இருந்தது, இருந்தாலும் ஒரு ஆர்வத்தில் இறங்கிவிட்டோம். ஏறும் போது திண்டாட்டம் ஆகிவிட்டது. கொஞ்ச நேரம் அங்கே ஆட்டம் போட்டுவிட்டு முர்தேஷ்வர் நோக்கி வண்டி சென்றது. மாலையில் அங்கே ஒரு அழகான ஹோட்டலில் ரூம் கிடைக்கவே சந்தோஷமாக சென்றோம் கடற்கரைக்கு. அங்கே சின்ன டென்னிஸ் பந்து ஒன்று வாங்கி, கால்பந்து விளையாட ஆரம்பித்தோம். ஆடிய அரை மணிநேரமும் விறுவிறுப்பாக சென்றது ஆட்டம். கடைசியில் ஆட்டம் 2-2 என்று சமநிலையில் முடிந்தது. அன்று இரவு நித்திரை என்னும் யாத்திரையில் அனைவரும் மூழ்க்கி இருந்ததால் எப்பொழுதும் ஆடும் சீட் ஆட்டம் ஆட முடியவில்லை.

அடுத்த நாள், கோகர்னா போவதற்கு நேரம் இல்லை என்பதால், சிரிங்கேரி மற்றும் கொல்லூர் பார்த்துவிட்டு ஊருக்கு திரும்பிவிடலாம் என எண்ணீக் கொண்டு கிளம்பினோம். இரண்டு கோயில்கலும் அழகாக இருந்தன. சொல்ல வேண்டிய விசயம் என்னவென்றால், வண்டி சென்ற பாதை தான். ஓரு நாள் முழுதும் மலை மீது தான் பயனம். கொஞ்சம் பயமாக இருந்தாலும், சுற்றி பச்சை போர்வை போத்தியது போல இருந்த மரங்கலும், 180 டிகிரி வளைவுகளும் ரசிக்க வைத்தன. மனிதர்களை அவ்வளவாக பார்க்க முடியவில்லை, வெறும் மலைகளும், மரங்களும், மேகங்கலும் தான் கண்ணுக்கு எட்டிய தூரம் வரைத் தெரிந்தது. வரும் வழியில் “ஆகும்பே” என்னும் இடத்தில் உள்ள சில சில இடங்களையும் பார்த்துவிட்டு வந்து சேர்ந்தோம். வடக்கு கர்நாடகம், பெங்களூருக்கு நேர் மாறாக இருந்தது. ஆங்காங்கே வீடுகள், வீட்டை சுற்றி மரங்கள், நதியில் குதித்து விளையாடும் மீன்கள் என இயற்கையோடடு ஒன்றி இருந்தது வியப்பாகவும், சந்தோசமாகவும் இருந்தது.

Add comment அக்டோபர் 11, 2008

தூங்கும் நேரத்தில் தூங்கா நகரத்தில்

போன வாரம் மதுரை போயிருந்தேன் காலேஜில் ஒரு வேலை இருந்ததால். சீனியர் ஜூனியர் என கூட்டம் கூடி இருந்தோம், கூத்து அடிக்கிறதுக்கு இல்ல, காலேஜ்ல சில வேலைகளை முடிக்க. என்னதான் வேலை என்றாலும் மக்கள் ஒன்று கூடிட்டா எதாவது நடந்தே ஆக வேண்டும் அல்லவா. எங்களீடம் இருக்கும் ஒரு கெட்ட பழக்கம் நேரங் கெட்ட நேரத்தில் காபி டீ குடிப்பது. இந்த முறை இரவு 2.45 மணீக்கு அப்படி ஒரு ஆசை, டீ குடித்தே ஆக வேண்டும் என்று. உடனே கூட்டத்தை கூட்டி கொண்டு புறப்பட்டோம். மதுரை தான் தூங்கா நகரம் ஆச்சே எதாவது டீ கடை இருக்கும் என்று ஒரு நம்பிக்கை. நம்பிக்கை வீண் போகவில்லை. திருப்பரங்குன்றத்திற்கு நடக்க ஆரம்பித்தோம். எப்போது இந்த மாதிரி சமயத்தில் எங்கு சென்றாலும் கட்டாயாமாக இரவையும் பொருட்படுத்தாமல், வேலை பார்த்து கொண்டிருக்கும் போலீசை பார்க்காமலும் பேசாமலும் சென்றதில்லை. அன்றும் அதே போல் தான், லாரியை மடக்கி கொண்டிருந்த போலிசிடம் சொல்லிவிட்டு முன்னேறினோம்.

சரி இதில் என்ன இருக்கிறது என்ன ஆச்சர்யாமன விஷயம் என்வென்றால்,வீதிலயில் நடக்கும் மக்கள் கூட்டம் தான். ஆங்காங்கே மக்கள் தங்கள் வேலையை ஆரம்பித்து இருந்தனர். ஒரு வீட்டில் வெளியே உட்கார்ந்து எதோ பிரச்சனை பற்றி பேசி கொண்டு கூட இருந்தனர். சும்மா சொல்லவில்லை மதுரையை தூங்கா நகரம் என்று. கடைசியாக டீ கடை சென்று அடந்தோம். மூன்று மணிக்கு டீ குடிப்பதே சுகம் தான், அதுவும் பெங்கலூரில் காய்ந்து கிடக்கும் எங்களுக்கு நம்ம ஊரு டீயின் சுவையை சொல்ல முடியாது. டீ யின் சுவை நாக்கில் இருக்க டதிரும்பினோம் காலேஜுக்கு.

Add comment ஆகஸ்ட் 11, 2008

பில்லா

“பில்லா” என்று பார்த்தால் முதல் ரீமேக், டான் என்று பார்த்தால் நான்காவது ரீமேக் ஆனால் புதிதாக தான் இருந்தது. புதிதாக வெளிவந்த டான் படம் போல் செட் எல்லாம் இருக்கிறது என்று நண்பர்கள் கூறுகின்றனர், அந்த படம் பார்க்காததால் எனக்கு ஒன்றும் தெரியவில்லை. விஷ்ணுவர்தன் ஒவ்வொரு காட்சிகளையும் செதுக்கி இருக்கிறார். அஜித்தை இப்படி ஒரு ஸ்டைலில் பார்த்ததே இல்லை. படம் முழுவதும் கருப்பு சட்டை அல்லது வெள்ளை சட்டை, கண்ணில்   ஒரு கூலிங் கிளாஸ் என சூப்பராக இருக்கிறார் அஜித். சில படங்களில் அதிகமாக பேசி எதாவது செய்வார். இந்த படத்தில் அது எதுவும் இல்லை. நடை மற்றும் உடையிலும் கலக்கி இருக்கிறார் அஜித். நமீதா எப்பவும் மாதிரி தான் ஒரு பாட்டு, கொஞ்சம் வசனம் கொஞ்சம் உடை என வலம் வருகிறார். நயன்தாராவுக்கு நமிதாவை விட கொஞ்சம் பெரிய ரோல் அவ்வளவு தான். பிரபுவுக்கு இன்ஸ்பெக்டர் வேடம், ஆனால் அவர் வந்த உடனே ரசிகர்கள் சிரிக்கின்றனர், அது ஏன் என்று தான் புரியல. படத்தின் முக்கிய அம்சம் மேட்சிங் மேட்சிங்காக இருக்கும்  பேக்கிரவுண்ட் மற்றும் அதுக்கு  ஏற்ற மாதிரி இருக்கும் ஆடைகளும் தான். அஜித் ரஜினி மாதிரி ஆட முயற்சித்தாரா இல்லையா என்று தெரியவில்லை, ஸ்டெப் போட்டு ஆடி இருக்கிறார். ஒரே ஒரு வித்தியாசம் ரஜினி ஆடினா அசிங்கமா தெரியாது ஆனா அஜித் ஆடினா அப்படியே தெரியுது. மற்றபடி படம் சூப்பர். ஒரு புது அஜித்தை படத்தில் பார்க்கலாம்.

3 comments December 16, 2007

முதல் கிறுக்கல்

முதன் முதலாக, தமிழில் இணையதளத்தில் தமிழில் அடிக்கின்றேன். தமிழ் ஆர்வலர்கள் யாரேனும் இதை பார்த்தால் ஆத்திரம் அடைய வாய்ப்புகள் அதிகம் என்று தோன்றுகிறது. ஏனென்றால் எத்தனை எழுத்து பிழைகள் பல் இளித்து சிரிக்கின்றன என்று எனக்கெ தெரியவில்லை. தமிழில் ஒரு சிறிய பத்தி அடித்து நான்கு வருடங்கள் ஆகின்றன. கடைசியாக நான் தமிழில் எழுதியது பன்னிரெண்டாம் வகுப்பு இறுதி தேர்வில் தான். அதுவும் ஆங்கில கீபோர்டில் அடிப்பது கொடுமையோ கொடுமை. நான்கு வரிகள் அடிக்க நாற்பது நிமிடம் ஆகிரது. எனினும் தமிழில் ஒரு வலைப்பதிவு (Blog) அடிக்க வேண்டும் என்று தோன்றியது. அதன் விளைவு தான் இது. இப்பொழுது இத்துடன் முடித்து கொள்கிறேன், மற்றவை பிறகு.

2 comments அக்டோபர் 19, 2007


 

December 2009
தி செ பு வி வெ ஞா
« ஜூன்    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

அண்மைய இடுகைகள்

பக்கங்கள்

வகைகள்