பீமின் டவுட்டு
செப்டம்பர் 4, 2010 at 12:11 பிற்பகல் 2 பின்னூட்டங்கள்
காலை ஏழு மணி, அதிகமில்லாத குளிரும், இதமான வெயிலுமாக நல்ல உறக்கத்தை கொடுத்தது, ரோட்டோரமாக படுத்து தூங்கிக் கொண்டிருந்தான் நம்ம ஹீரோ பீம். அதி வேகமாக ஹாரன் சத்தத்துடன் சென்ற வேன் அவன் தூக்கத்தையும் கூடவே தூக்கிச் சென்றது. எழுந்து பார்த்தான், நிம்மி, நிக்கி, மினியின் ஸ்கூல் வேன். தூக்கம் கலையாத விளிகளுடன், ஏறி சென்றனர் குழந்தைகள். ஐயோ பாவம், 23 வயதில் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக இவர்களின் பெற்றோர் படுத்தும் பாடு. ஐந்து வயதில் என்னவெல்லாம் செய்கின்றனர், வாழ்க்கையை அனுபவிப்பதை தவிர, என்று நினைத்துக்கொண்டான்.
அடுத்த இரண்டு மணி நேரம் அவனுக்கு பிடிக்காத நேரம், தலை போகிற அவசரத்தில் அலுவலகம் செல்லும் நேரம். சற்று ஒதுக்குப் புரமாக சென்று பார்த்த்க் கொண்டிருந்தான். அலுவலகம் போகும் அவசரத்தில் யாருக்கும் நிற்காத வண்டிகள், ரோட்டரமாக கேட்பாரற்று கிடக்கும் இவனுக்காகவா நிற்க போகின்றன ? அலுவலகத்தில் என்னத்த சாதிப்பார்களோ, ஆனால் போகிற வேகத்தை பார்த்தால், ஏதோ கோட்டையை பிடிக்க போகிற மாதிரி தான் தெரியுது. ஜம்மென்று பின்னாடி உட்கார்ந்து கேள்வி கேட்கும் மனைவிகளின் ஆர்பாட்டத்தை கேட்டுவிட்டு ரியாக்சன் கொடுக்காத கணவன்களின் வாகனங்கள், நான் நேர் கோட்டில் தான் செல்வேன் அதுக்குள்ள நீயும் வரக்கூடாது, நானும் வெளிய வரமாட்டேன் என்று தனியே ஒட்டும் பெண்களும், அவர்களை முந்திச் சென்று வித்தைக் காட்டும் பசங்களும், இவர்களை மதிக்காமல் ரோட்டின் நடுவில் செல்லும் கார்களும், யாரையுமே மதிக்காமல் ரோடை அடைதுக் கொண்டு செல்லும் வேன்களும் லாரிகளுக்கும் தான் அடுத்த இரண்டு மணி நேரம் அந்த ரோடு சொந்தம், பீமுக்கு இல்லை.
ஆனால் பீமுக்கு பிறந்தநாளில் இருந்தே பெரும் சந்தேகம். ஏன் இப்படி ? எதற்காக இந்த ஓட்டம் ? வயிற்றுக்காக தானா ? ஏன் அவன் இல்லையா ? அவன் வாழவில்லையா ? அவனுக்கு தெரிந்த அவன் நண்பர்கள் க்ளின்டன், புஷ், புடின் எல்லாம் இல்லையா.ஏன் தான் இவர்கள் இப்படி அலைகிறார்களோ என்று நினைத்துக் கொண்டான். பாவம், ஆண்டவன் இவர்களையும் தன்னை போல படைத்திருக்கலாம்.
அவனுக்காக சாப்பாடு வருவது தெரிந்தது. எதிர் வீட்டு மாமி, அவனுக்காக இட்லி கொண்டுவந்து கொண்டிருந்தாள். ஆம், க்ளின்டன், புஷ், புடின், பீம் என்ற அவள் தெருவில் இருக்கும் நாய்களில் அவளுக்கு பிடித்தது, பீம் தான். சூடான இட்லி சாப்பிட சென்றான் பீம், பாவம் அவனுக்கு எங்கே தெரிய போகிறது, மனிதனின் ஆசை பற்றி. அவனுக்கு தேவை ஒரு வேலை சாப்பாடு, மனிதனுக்கு அப்படியா ? சொல்லுங்கள் மனிதர்களே !!!
Entry filed under: கதை, கற்பனை, புலம்பல்கள். Tags: .
1.
Priyadharshini | 5:19 பிற்பகல் இல் ஜனவரி 11, 2011
Very nice and real one
Your way of writing reminds me little about kalki.
2.
Balamurugan | 10:08 மு.பகல் இல் ஜனவரி 12, 2011
Super narration da senthil… This is really good…