சித்திர பாவை – அகிலன்
ஜூலை 17, 2010 at 8:22 பிற்பகல் மறுமொழியவும்
சில நாட்களுக்கு பிறகு மீன்டும் ஒரு தமிழ் நாவல். கல்கியின் நாவல்களான, பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு என சரித்திர கதைகளை படித்துவிட்டு, சரித்திர நாவல்கள் மட்டுமே என்ற முடிவில் இருந்தேன். ஆனால், மூத்த நண்பர்கள் சில பேர் கூறவே, சித்திர பாவை படிக்க முடிவு செய்தேன். அண்ணன்களின் அறிவுறை என்றும் தப்பாக போவதில்லை.
ஆரம்பம் முதலே அம்ர்க்களமாக இருந்தது. ஒவியக் கலையே உயிர் என்றும், எளிமையாக வாழ வேண்டும் என்ற என்னம் கொண்ட சில மனிதர்களையும், பணமே வாழ்க்கை என்றென்னி வாழ்பவர்களையும், அவர்களால் நல்லவர்களுக்கு வரும் கொடுமையையும் அழகாக சித்தரித்திருக்கிறார். ஓவியக் கலை எவ்வாறு அழிந்துக் கொண்டிருக்கிறது, நடுத்தர மக்களின் விபரீத ஆசைகள், அதன் விளைவுகள் என்ன என்பதை பல இடங்களில் சுட்டிகாட்டியிருக்கிறார்.
1970களில் எழுதப்பட்ட கதையாக இருந்தும், கதையில் வந்த அனைத்தும், இன்றும் அப்படியே பொருந்தும். கதையின் கரு,
“அழகாய் வாழக் கற்றுக் கொள்; முடிந்தால் வாழ்க்கையை அழகு படுத்து; முடியாவிட்டால் அதை அசிங்கப் படுத்தாமலாவது இரு”.
இதை கதையில் உள்ள பல்வேறு கதாபாத்திரங்களின் உதவியோடு செம்மையாக் சொல்லி இருக்கிறார். அண்ணாமலையின் வாயிலாக ஒரு ஒவியக் கலைஞனின் வாழ்க்கை, ஆனந்தி என்னும் கதாபாத்திரத்தின் வழியாக ஒரு அழகிய பொறுமையான பெண்ணின் வாழ்க்கை, அதற்கு எதிர்மாறாக இருக்கும் சுந்தரியின் வாழ்க்கை, மாணிக்கம் என்னும் கதாபாத்திரத்தின் வழியாக பணவெறி பிடித்தால் என்ன ஆகும் என்றும் அழகாக எடுத்துறைத்துள்ளார். கதையின் நடுவே வரும் அறிவுரைகள் என்றென்றும் கடைபிடிக்க வேண்டியவை. முடிவில் அசுர வேகம், எதிர்பாரத சில திருப்பங்கள் இன்னும் கதையை வேகமாக நகர்த்தி செல்கின்றன.
சில நாட்களுக்கு பிறகு நல்ல புத்தகம் படித்ததில் திருப்தி. படிகக வேண்டிய புத்தகங்களில் ஒன்று.
Entry filed under: கதை, புத்தகங்கள். Tags: அகிலன், சித்திரபாவை.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed