குடிமகனே குடிமகனே

ஜூன் 25, 2010 at 3:14 மு.பகல் 1 மறுமொழி

9.15 பஸ்சை பிடிக்க அவசர அவசரமாக சிட்டி பஸ்சை பிடித்தேன். ஆகா கடைசி சீட் காலியாக் இருந்தது.  பஸ்ஸின் கடைசி சீட் என்றால் பிரச்சனை இல்லை, குடும்ப மக்கள் அதிகம் அண்டுவதில்லை, பஸ்சிலும் மனைவியை  பிரிய விருப்பமில்லாமல் தனியாக இருக்கும் பசங்களை எழுப்பிவிடும் கணவன்கள் பெரும்பாலும் வருவதில்லை, ஏதோ கடைசி சீட் என்றால் வேடிக்கை  பார்த்துக் கொண்டோ, ஊரையோ, நம்மையோ, இல்லை நேற்று ஆபீசில் பார்த்த் பெண்ணையோ பற்றி யோசித்துக் கொண்டு செல்லலாம் என்பது எண்ணம்.

ஆனால் அரசு பேருந்து என்றால் அவ்வளவு சொகுசாக இருக்குமா என்ன, அடுத்த நிறுத்தத்தில் காத்துக்கொண்டிருந்தது இம்சை, இந்திய ‘குடி’மகனின் ரூபத்தில். கிக் ஏறிய சிங்கம் படக் என ஏறி அமந்தது, துரதஷ்ட்டவசமாக என் அருகில். சில மப்பு மன்னர்கள் கிக் ஏறிய உடனோ இல்லை பஸ் ஏறிய உடனோ மப்பு மற்றும் வாயின் உதவியோடு உலகையே திட்டி தீர்ப்பார்கள், ஆனால் இவரோ ஏறிய உடன், மட்டையாகிவிட்டார் என் தோழில். சில நேரம் பொறுத்து பார்த்தேன், ஒன்றும் சரிபட்டு வராமல் போக செயலில் இறங்கினேன். ரனகலமா எதுவும் எதிர்பார்க்காதீங்க, ஒரு சீட்டு தள்ளி உட்கார்ந்தேன்.

இதை எப்படியோ பார்த்த குடிமகன், கால்களை நீட்டி படுக்க முயற்சித்து, இட பற்றாற்குறை காரணத்தால், தன் காலை அந்த மூலையில் இருந்தவரின் மேல் போட்டுநீட்டி நிமிர்ந்து படுத்தார். வேறு வழி இல்லாமல் அவர் இடம்பெயர்ந்தார். அடுத்து இடைஞ்சலாக இருந்தது நான். தலையை வைத்து முட்ட ஆரம்பித்த்வுடன் நானும் எழுந்து முன்னால் இருந்த சீட்டில் அமர்ந்தேன். கடைசி சீட்டில் கிடைத்த் களிப்பில் மெத்தையில் படுப்பது போல் படுத்து தூங்க ஆரம்பித்தார்.

இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கண்டக்ட்டர் சும்மா இருப்பாரா ? அப்படியே ஷாக் ஆயிட்டாரு.  “டிக்கெட் எடுத்தான சார் இவன் ? எங்க ஏறினான் ? ” என கேள்வி கனைகளை தொடுத்தார். டிக்கெட் எடுக்கவில்லை என்பதை உறுதி செய்தபின், மயங்கி கிடக்கும் குடிமகனிடம் கேள்விகளை கேட்க ஆரம்பித்தார். கண்டக்டரின் நம்பிக்கையை பாராட்டியே ஆக வேண்டும். அடித்து எழுப்பி பார்த்தார், போலீஸ் என்று மிரட்டி பார்த்தார், ஒன்னும் வழியில்லை. விடாமுயற்சியினால் எப்படியோ எழுப்பிவிட்டார். டிக்கெட் வாங்க முடிவு செய்த குடிமகன், 200 ருபாயை எடுத்துக்  கொடுத்தார் 7 ருபாய் டிக்கெட்டுக்கு, திரும்பவும் கும்மென்று தூங்க ஆரம்பித்தார். பாவம் கண்டக்டர், டிக்கெட் கொடுத்துவிட்டு, சில்லரையை பாக்கெட்டில் புகுத்திவிட்டு நான்கு ஐந்து நல்ல வார்த்தைகளால் வாழ்த்திவிட்டு சென்றார். சிறிது நேரத்தில் நான் இறங்கிவிட்டேன். குடிமகனுக்கு என்ன ஆனது தெரியவில்லை, கண்டக்டரின் கோபத்தை பார்த்தால் ஒன்று அடித்து இறக்கிவிட்டிடுப்பார் அல்லது போலீசிடம் ஒப்படைத்திருக்கலாம்.

அடுத்த நாள், ரயில் நிலையத்திற்கு சென்றிருந்தேன். அங்கே ஒரு குடிமகன், வயிறு முட்ட குடித்துவிட்டு ரோட்டோரமாக சொர்க்கத்தில் தூங்குவது போன்று தூங்கி கொண்டிருந்தார்… அருகில் ஒருவர் அமர்ந்து அவரை எழுப்பவது போல் இருந்தது. உற்று பார்த்தவுடன் தெரிந்தது அருகில் இருப்பவர் எழுப்பவில்லை, குடிமகனின் பாக்கெட்டில் இருந்த அனைத்தையும் தன் பாக்கெட்டிற்கு மாற்றி கொண்டிருந்தார். அருகே 20 அல்லது 30 பேர் இருந்ததும் அவர் செய்வதை பார்த்தும் ஒருவரும் ஒன்றும் சொல்லவில்லை. மொழி தெரியாத ஊரில் பிழைக்க வந்த ஊரில் வம்பெதற்கு என்று நானும் கண்டுக்கொள்ளவில்லை.

சரி சரி, மொக்கை போதும், ஒவ்வொரு ஊரிலும் தினமும் காணும் காட்சி தான், ஆனால் டவுட் என்னவென்றால், குடிக்கிறது குடிக்கிறாங்க கொஞ்சம் அளவா குடிக்கலாமே.

ஒவ்வொரு முறை இப்படி பட்ட மக்களை பார்க்கும் போது, மனதில் நிற்பது ஒன்று தான், மனிதனை மிருகத்திடம் இருந்து வேறுபடுத்தும் புத்தி ஒருபொழுதும் தண்ணியால் அளித்துவிட கூடாது என்பது தான்.

Entry filed under: புலம்பல்கள். Tags: .

கற்பனைக் கோட்டை சித்திர பாவை – அகிலன்

1 மறுமொழி Add your own

  • 1. Ramji  |  3:37 மு.பகல் இல் ஆகஸ்ட் 23, 2010

    Either it’s limit or unlimit, few people used to act like “King of the World” and few people used to loose their sub-consciousness. Moreover, they won’t learnt from their mistakes. They used to continue everyday/week.

    பதில்

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


 

ஜூன் 2010
தி செ பு வி வெ ஞா
« ஜூன்   ஜூலை »
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

அண்மைய இடுகைகள்

பக்கங்கள்


Follow

Get every new post delivered to your Inbox.