Archive for ஜூன், 2009

கற்பனைக் கோட்டை

காலை எட்டு மணிக்கு சரியாக அந்த நாற்பது ருபாய் அலாரம் அதன் வேலையை சரியாக செய்து முடித்த்து. தலையில் விழுந்த குட்டு தாங்க முடியாமல் அலாரம் வாயை மூடிக் கொண்டது. தூங்கவும் முடியாமல், தூக்கத்திலிருந்து எழவும் முடியாமல் தத்தளித்து கொண்டிருந்தான் அவன், கதையின் கதாநாயகன். அலாரம் உதவுவதைவிட அவனுக்கு அதிகமாக உதவுவது ஒவ்வொரு நாளும்  இருக்கும் மீட்டிங் தான். அன்றும் இருந்தது 9.30க்கு.

அதிவேகமாக கிளம்பினாலும், அலுவலகம் செல்ல நேரமாகிவிடும் போல் இருந்ததால், ஆட்டோவின் உதவியை நாடினான். 2 கிலோமீட்ட்ருக்கு 50 ருபாய், கேட்டான். “என்னனே இவ்ளோ  ?” என்றதற்கு, “அங்க திரும்ப சவாரி கிடைக்காது சார், சாப்ட்வேர் இஞ்சினியர் நீங்களே இப்படி சொல்லலாமா ?” என்பது தான் பதில். ஆனால் அவன் ஆட்டோவில் செல்லவில்லை. அட்டோகாரன் அதிகம் கேட்டாலும் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் தான் காரணம், காய்கறி விலை கூடினாலும் அவர்களே தான் காரணம். இவ்வளவு நாள் அரசு ஊழியர்கள் இப்பொழுதோ சாப்ட்வேர்  இன்ஜினியர்கள், மக்களுக்கு குறை சொல்ல யாராவது இருந்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். எப்படியோ கம்பெனிக்கு 9.31கு சென்றுவிட்டான். 11.00 க்கு மீட்டங் சுபமாக முடிந்தது. இருந்தாலும் அவன் மேனேஜர் முகம் மட்டும் உர் என ஏன் இருந்தது என புரியவில்லை.

கையில் காபியுடன் அவுட்லுக்குள் லுக்கை செலுத்தினான். தேவையில்லாத மெயில்களுக்கு நடுவே இருந்தது, அவன் மேனேஜரின் மெயில். நேற்று அவன் செய்வதாக சொல்லி இருந்த 10 விஷயங்களில், ஒன்று முடிக்கவில்லை என்றும் அது ஏன் என்றும், இவ்வாறு வேலை செய்தால் உருப்படாது என்பது போலவும் இருந்தது மெயில். இது வழக்கம் தான், எவ்வளவு செய்தாலும் தவறுகள் மட்டுமே தான் அவர்கள் கண்களுக்கு தெரியும். அது எப்படி என்பது இதுவரை அவனுக்கு புரிந்ததில்லை. ஆனால் அவரின் மெயில் ஒவ்வொன்றையும் படிக்கும் போது கோபம் மட்டும் எரிமலை போல பொங்கி அடங்கும், வேலையின் மீது வெறுப்பு வரும், மேனேஜர் மீது கோபம் வரும். அவனால் முடிந்தது அவ்வளவு தான்.

அடுத்து வேலையில் மூழ்கினான். பிரேசில் கஸ்டமர் கேட்ட விடைகளுக்கு தெளிவாக பதில் அளித்தான். பாவம் அவர்கள் கணக்கில்லாமல் செலவழித்துவிட்டு விடைக்காக நிற்பவர்கள், அவர்களை அவன் என்றும் நிற்க வைப்பதில்லை. அடுத்து ஒரு மணிக்கு சாப்பாடு. சாப்பாடின் வாசனை மட்டுமே போதும் அவனுக்கு, அதற்கு மேல் சாப்பிட தோன்றுவதே இல்லை. ஏன் என்று அவனுக்கும் தெரிந்ததில்லை. பதார்த்தங்களின் பெயரில் மட்டுமே மாற்றம் இருக்கும் தினமும், லக் இருந்தால் புழு பூச்சியை சாப்பாட்டில் பார்க்கும் பாக்கியம் கிடைக்கும், அவ்வளவு தான். என்ன செய்வது. கம்ப்ளெய்ன்ட் செய்தால் வேறு ஒரு ஹோட்டல்காரன் வருவான், ஒரு வாரம் நன்றாக இருக்கும், அடுத்த வாரம் அதே கதை தான்.

சாப்பிட்டுவிட்டு வேலையை தொடர்ந்தான். நேரம் முடிந்துக் கொண்டே இருந்தது, வேலை இருந்துக் கொண்டே இருந்தது. வீட்டிற்கு  ஃபோன் செய்தான். பக்கத்து வீட்டு ஆண்டியும் இருந்தார்கள் வீட்டில். ஆண்டியுடன் பேச வேண்டிய சூழ்நிலை. அவர்களோடு  அதிகமாக் பேச விரும்புவதில்லை, இருந்தாலும் மாட்டிக் கொண்டான் இன்று,

“என்னப்பா எப்படி போகுது வேலை ? “

“நல்லா போது, ஒன்னும் பிரச்சனை இல்ல”.

“எல்லாம் டவுனுனு கேள்விப்பட்டேன்” (பார்க்கும்போது எல்லாம் இதே கேள்வி தான்).

“ஆமாஆன்டி, எங்க டீம்ல பிரச்சனை இல்ல”

“சரிப்பா மணி கூட சொல்லிட்டே இருந்தான்,சாப்ட்வேர் அவ்வளவு தான், அப்படினு, இது நிலைக்காதுபா, தெரிஞ்சு தான் நாங்க மெக்கானிக்கல் எடுத்தோம்” (தெரிஞ்சா எடுத்தீங்க, cs இல்லைனுல எடுத்தீங்கனு சொன்னா ஒத்துக்கவா போறீங்க ?)

“சரிப்பா உடம்ப பார்த்துக்கோ”

எல்லா வேலையும் முடிச்சுட்டு வர இரவு பன்னிரெண்டு, பெர்சனல் மெயிலை புரட்டிவிட்டு சில வேலைகளை முடித்துவிட்டு படுக்க 2. காலேஜ் நினைவுகள் கண் முன் வந்து நின்றன. சாப்ட்வேர் இஞ்சினியர் பற்றி அவனுக்கு அதுவரை தெரிந்தது எல்லாம், மனசுக்கு பிடித்த வேலை, கம்பெனி முழுவதும் அழகான பொண்ணுக, கை நிறைய சம்பளம், எதையும் வாங்க முடியும் சம்பளம், அவ்வளவு தான். வந்ததற்கு பிறகு தான் தெரிந்தது, அப்படி இல்லை என்று. அதுவும் நம்ம தமிழ் படங்கள்  “கற்றது தமிழ்”, “அறை எண் 305ல் கடவுள்” எல்லாம் பார்த்தா அவ்வளவு தான். கற்றது தமிழில் காமிச்சது போல அறைக் குறை ஆடைகலுடனும் யாரும் வருவதில்லை, “அறை எண்” படத்தில் காட்டியது போல சும்மா சம்பளம் கொடுப்பதில்லை. ஏன் இவ்வளவு கேவலமாக படங்களில் காட்ட வேண்டும் என்று நினைத்த போது கோபம் வந்தது.  கஷ்டப்பட்டு மானத்தோடு உழைத்து வாழ்வதை இப்படி சித்தரிக்கிறார்களே என்று நினைக்கும் போது  கோபம் உச்சியைத் தொட்டது. அதுவும் இதை சொல்வது யார் என்றால், பெண்களை அறைக் குறை ஆடைகளுடன் ஆடவைத்து காதலை வத்து காமெடி பண்ணி காசு சம்பாதிக்கும் கோஷ்டி. “என்ன கொடுமை சரவணன் இது” என நினைத்துக் கொண்டான். அவன் காலேஜில் கட்டி வைத்திருந்த கற்பனை கோட்டை மெதுமெதுவாக தகர்ந்து கொண்டிருந்தது. ஆனால் மக்க்ளின் கற்பனையோ எல்லை இல்லாமல் வளர்ந்துக் கொண்டு தான் இருக்கிறது. இவ்வாறு நினைத்துக் கொண்டே தூங்கி போனான். காலை எட்டு மணிக்கு சரியாக அந்த நாற்பது ருபாய் அலாரம் அதன் வேலையை சரியாக செய்து முடித்த்து.

1 comment ஜூன் 17, 2009

விருப்பமில்லாத இடைவெளி

ஒரு மாதத்திற்கு மேலே ஆகிவிட்டது, இந்த வலைபதிவில் நிகழ்வுகளையும் நினைவுகளையும் பதிவு செய்து. அதுக்காக ஏதோ பெருசா இருக்குனு நினைக்காதீங்க. வழக்கம் போல மொக்கை தான். சரி இரண்டு மாசமா என்ன நடந்சுச்சுனு யோசிச்சுப் பார்த்தேன். இரண்டு படம், இரண்டு  டூரு,  இரண்டு  குட்டி கதையும் கவிதையும் மனசுல தோன்றி, சோம்பேறி தனத்தால பதிவு செய்யாம, சின்ன மூலைக்குள்ள் ஒரு ஓரத்துல இருக்கு, அத மெதுவா தூசித் தட்டி, பெயர் வைச்சு, பதிவு செய்யனும். அத கூடிய சீக்கிரத்துல செய்வேன் அப்படினு சொல்றதுக்கு தான் இப்ப இந்த பதிவு. ஒகே ஒகே கூல் டவுன்.

சரி நான் போன சுற்றுலாக்கள் மற்றும் படங்கள் பற்றிய தகவல்கள் ஆங்கில வலைபதிவுல இருக்கு. தமிழ்ல அடிக்க நேரம் கிடைக்கல. இனிமேலாவது கொஞ்சம் நேரம் ஒதுக்கி தமிழ் வலைப்பதிவுல ஏதாவது அடிக்கனும். பார்ப்போம் நம்ம நினைக்குறது ஏதாவது நடக்குதானு.

2 comments ஜூன் 4, 2009


 

ஜூன் 2009
தி செ பு வி வெ ஞா
« மார்    
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

அண்மைய இடுகைகள்

பக்கங்கள்

வகைகள்