நான் கடவுள் – விமர்சனம்
பெப்ரவரி 10, 2009
காலை ஆறு மணிக்கு நான்கு அலாரங்கள் அடிக்க, அவசர அவசரமாக கிளம்பி காலையில் வயிற்றுக்கு எதுவும் உண்ணக் கொடுக்காமல், ஓடி சென்று தியேட்டரில் உட்கார்ந்தோம். அன்று பரீட்சைக்கு காட்டும் அக்கறையை விட இன்று படத்துக்குக் காட்டும் அக்கறைத்தான் அ திகம். படத்தைப் பற்றி ஏகப்பட்ட கனவுகள். சில இடங்களில் கொஞ்சம் கொடுரமாக இருக்கும் என்று தான் எண்ணினோம். ஆனால் படம் முழுதுமே அப்படி தான் இருந்தது. பிச்சைக்காரர்களின் வாழ்க்கையைப் பற்றியதே கதை. அகோரி சாமி வேடத்தில் வரும் ஆர்யா வருவது சில நேரம் தான். மற்ற நேரங்களில் பூஜாவும் அவளோடு வில்லன்களால் பிச்சை எடுக்க வைக்கப்படும் மக்களும் தான் வருகின்றனர். அவ்ர்கள் நடிப்பும் புகழும்படியாகவே இருந்தது. பூஜா மற்றும் அவர்களது நடிப்பை கண்டிப்பாக பாராட்டி தான் ஆக வேண்டும். பூஜாவுக்கு விருது கிடைத்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.
ஆர்யா வருவதோ சில காட்சிகள் தான் என இருக்க அவர் எதற்கு மூன்று ஆண்டுகள் நடிக்கவில்லை என்பது புரியாத புதிர். பாலா மிக மிக தத்ரூபமாக எடுக்க முயற்சித்திருக்கிறார், ஆனால் அதுவே அளவுக்கு அதிகமாகிவிட்டதாக தோன்றுகிறது. சில இடங்களில் நம்மை நெகிழ வைப்பதற்கு பதிலாக் நெளிய வைக்கிறது. கடைசி காட்சியில் பூஜாவின் நடிப்பு அபாரம், ஆர்யாவின் இயல்பான நடிப்பு நன்றாக இருக்கிறது, பாலாவின் முயற்சிக்கு பாராட்டுக்கள், ஆனால் படத்தில் ஒரு முழுமை இல்லை என்றே தோன்றுகிறது. அதனால் எனக்கு படம் பிடிக்கவில்லை.
Entry Filed under: தமிழ் திரைப்படங்கள், புலம்பல்கள். குறிச்சொற்கள்: சினிமா, நான் கடவுள், பாலா.
2 Comments Add your own
Leave a Comment
Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
கணேஷ் | மார்ச் 16, 2009 at 7:02 மு.பகல்
எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உங்களுக்கு டூயட் இல்லாததால் பிடிக்காமல் போயிருக்கலாம். மற்றபடி இப்படியொரு படம் தமிழுக்கு மகுடம்…
2.
senthilkumaran | மார்ச் 16, 2009 at 5:42 பிற்பகல்
பருத்திவீரன் படத்தை பற்றி கேட்டால், படம் நன்றாக இருந்தது ஆனால் படத்தின் இறுதி காட்சியை என்னால் பார்க்க முடியவில்லை. “நான் கடவுள்” படத்தில் இடை இடையே அது போல் சில காட்சிகள் இருந்தன என்பதை மறுக்க முடியாது. பாலா தத்ரூபமாக எடுத்திருக்கிறார் என்று நான் பாராட்டுவேன் ஆனால் அக்காட்சிகளை பார்க்க விரும்பமாட்டேன்.
டுயட் இல்லாததால் தான் படம் பிடிக்கவில்லை என்பதை ஏற்க முடியவில்லை.