சந்தோஷ் சுப்ரமணியம்
மே 3, 2008
ஜெயம் ரவியின் மற்றோரு ரீமேக். படம் சூப்பராக இருந்தது. படத்தின் ஆரம்பத்திலேயே படத்தின் கதயை சொல்லிவிடுகின்றனர். சிறு வயதில் கை பிடித்து நடக்க வைக்கும் அப்பா, 24 வயது வரை, கையை பிடித்து கொண்டே இருந்தால் என்ன நடக்கும் என்பது தான் கதை. 24 வயது பையனுக்கு எப்படி பூரி சாப்பிட வேண்டும் என்று சொல்லி கொடுக்கும் கொஞ்சம் அதிகம் அக்கறை காட்டும் அப்பாவாக பிரகாஷ் ராஜ் கலக்கி இருக்கிறார். வாழ்க்கையில் தான் பார்க்கும் வேலை மற்றும் மணக்கும் பெண் இரண்டு மட்டுமாவது தானே முடிவு செய்ய வேண்டும் என்று நினைக்கும் ரவியை ஈர்கிறது ஜெனெலியா வாழ்க்கையை வாழும் முறை. ஜெனெலியா கவர்வது ரவியை மட்டும் அல்ல நம்மையும் தான். குழந்தை பொன்ற நடிப்பில் நன்றாக நடித்திருக்கிறார்,ஜெனெலியா. காமெடி நன்றாக அமைந்துள்ளது. பாஸ்கர் சில காட்சிகளில் மட்டும் வந்தாலும் நடிப்பை கண்டு வெடிக்கிறது சிரிப்பு. பாட்டுகள் அருமை. மொத்தத்தில் சந்தோஷ் சுப்பிரமணியம், குடும்பத்துடன் பார்க்க கூடிய நல்ல படம்.
Entry Filed under: தமிழ் திரைப்படங்கள், புலம்பல்கள். குறிச்சொற்கள்: சினிமா, தமிழ் சினிமா, திரைபடங்கள்.
3 Comments Add your own
Leave a Comment
Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
tamil videos | ஜூன் 26, 2008 at 5:03 பிற்பகல்
Neengal intha santosh subramaniyam padathai ingu elavasamaga parkalam
http://tamilmoviewaves.blogspot.com/2008/04/santhosh-subramaniyam-tamil-movie-watch.html
2.
jumriya | ஆகஸ்ட் 8, 2008 at 3:28 பிற்பகல்
vey nice
3.
jumriya | ஆகஸ்ட் 8, 2008 at 3:29 பிற்பகல்
i love you jeyam ravi