ஐ.பி.எல். டுவென்டி டுவென்டி
மே 3, 2008
சென்ற வாரம் சென்னைக்கும் பெங்களூருக்கும் நடந்த ஐ.பி.எல். டுவென்டி டுவென்டி கிரிக்கெட் மேட்ச்சுக்கு சென்றிருந்தேன். விளையாட்டு ஒரு பக்கம் இருக்க ஆட்டம் பாட்டம் என மற்றொரு பக்கம் அனல் பறந்து கொண்டிருந்தது. நாங்கள் சென்னையின் ஆதரவாளர்களாக அமர்ந்து இருந்தோம். பெங்களுருக்கு தான் ஆதரவு அதிகம் என்றாலும், தமிழன் இல்லாத இடம் உண்டா ? சிறிது நேரத்தில், சென்னையின் ஆதரவாளர்களாக தமிழர்கள் ஒன்று கூடிவிட்டனர். அதற்கு அப்பறம் என்ன ஒரே ஆட்டம் தான். ஒவ்வொரு பவுண்ட்ரிகளூக்கும் நம் மக்களீன் ஆரவாரம் பெங்களுர் மக்களை எரிச்சல் அடைய வைத்திருக்கலாம், ஆனால் அதற்காக நாம், கவலை பட முடியுமா என்ன ? கடைசியில் சென்னை ஜெயித்த போது எழுந்த சத்தம் வானை பிளக்க, கொடுத் காசு வீண் போகவில்லை என்று ஒரு சந்தோசம்.
டுவென்டி ட்வென்டி முறை நன்றாக இருக்கிறது. ஆட்டம் முழுவதும் விறுவிறுப்பு, விக்கெட் விழும் போது பறபறப்பு, பவுண்ட்ரிகள் பறக்கும் போது குதுகலிப்பு என அனைத்தும் நான்கு மணி நேரத்தில் முடிந்து விடுகிறது. எப்படி போகிறது என்று பொறுத்து இருந்து பார்ப்போம், இந்த டுவென்டி டுவென்டி.
Entry Filed under: கிரிக்கெட், புலம்பல்கள். குறிச்சொற்கள்: ஐ.பி.எல்., கிரிக்கெட்.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed