Archive for ஏப்ரல், 2008

மொக்கைகள்

கோவா சென்ற போது என்ன என்று தெரியவில்லை அனைவரும் மொக்கை போடும் மூடில் இருந்தனர். “லொல்ளு சபா” பார்த்த பாதிப்பு என்று நினைக்கிறேன். மக்கள் போட்ட மொக்கைகளில் சில,

கோவாவில் உள்ள ஃபெரியின் அருமை பெருமைகளை பற்றி பேசிக் கொண்டிருந்தார் ஒரு அண்ணன்.

அண்ணன்: முன்னாடி எல்லாம் இதுல கூட்டமே இருக்காதாம்
நான்: அப்ப பின்னாடி கூட்டம் இருக்குமா.

அண்ணன் என்ன நினைத்தார் என்று தெரியவிலலை, அதன் பிறகு அதை பற்றி பேசவே இல்லை.

கோவாவில் பேருந்தில் சென்று கொண்டிருந்தோம், பேருந்து செல்லும் வழி இயற்கை காட்சிகள் மிகுந்து அழகாக இருந்தது,

அண்ணண்: அப்படியே கேரளாவில் போற மாதிரி இருக்கு டா.
நான்: அப்ப பஸ்ல போற மாதிரி இல்லையா ?

அருகில் இருந்த இன்னொரு அண்ணன் பதிலுக்கு மொக்கை போட ஆரம்பித்து விட்டார், அதனால் நான் நிறுத்திவிட்டேன்.

மேலும் சில பேர் சில இடங்களில் மொக்கை போட்டனர், பல மறந்து போய்விட்டது, நினைவுக்கு வரவில்லை வந்தால் வலைப்பதிவில் அடிக்கிறேன். மொக்கை போடுவது போடுபவர்களுக்கு நன்றாக இருக்கலாம், கேட்பவர்களுக்கு கஷ்டம் தான்.

2 comments ஏப்ரல் 15, 2008

கோவாவில் முன்று நாட்கள்

சென்ற வாரம் கோவா சென்று இருந்தேன். சரக்கு அடிப்பவர்களின் சொர்க்கமாக இருந்தாலும், எங்களை போன்ற கூட்டங்களுக்கு என்று ஏகப்பட்ட கடற்கறைகள் இருந்தன. கோடை கால வெயில் மண்டையை பிளந்தாலும், கடற்கறை காற்று இதமாக தான் இருந்தது. கடலில் குளிப்பது, வெளியே வந்து விளையாடுவது என்று இனிதே முடிந்தது கோவா பயனம். கோவா சென்றது ட்ரெயினில், ட்ரெயின் சென்ற வழி அருமையாக இருந்தது. மலைகளின் நடுவே பாதை என்பதால் இயற்கையின் மாசுபடாத அழகை ரசித்துக் கொண்டே செல்ல முடிந்தது. வெள்ளிகிழமை கிளம்பி சனிக்கிழமை கோவா சென்றடைந்தோம். சனிக்கிழமை கோல்வா மற்றும் மஜோர்தா என்ற இரண்டு இடங்களை மட்டுமே பார்க்க முடிந்தது. அடுத்த நாள் வண்டியை வாடகைக்கு எடுத்ததால் பல இடங்களை பார்க்க முடிந்தது. பார்தத இடங்கள்,

டோனா பாலா
கோகோ
அகுடா கோட்டை
கலிங்குட்டே
பாகா

திங்கட்கிழமை, கவல்லோசிம், பெனோலிம் மற்றும் கோவாவின் தலைநகரான பனாஜிக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பினோம். மூன்று நாட்கள் வேலை பற்றி துளி அளவும் நினைப்பு இல்லாமல் சூப்பராக சென்றது.

1 comment ஏப்ரல் 14, 2008


 

ஏப்ரல் 2008
தி செ பு வி வெ ஞா
« மார்   மே »
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

அண்மைய இடுகைகள்

பக்கங்கள்

வகைகள்