Archive for மார்ச், 2008
சும்மா
வானவில்லின் ஏழு வண்ணங்கள்
அழகு என்றனர், பாவம்
அவர்களுக்கு எங்கே தெரியும்
உன் முன்னால் வானவில்லும்
தூசு தான் என்று.
காதலை பற்றியும் பெண்ணை பற்றியும் கவிதை எழுதுவது சுலபம் என்றான் நண்பன், அதுக்கு தான் இந்த முயற்சி.
Add comment மார்ச் 28, 2008
பொற்காலம்
சுற்றி திரிந்தேன் சுதந்திரமாக
கல்லூரி என்னும் கூட்டுக்குள்
செய்யாத சேட்டைகள் இல்லை
குறும்புகள் குற்றம் இல்லை
இருந்தது வகுப்பறையில்
கேட்டதோ நண்பர்களின் காதல் கதைகள்,
படித்தது பரீட்ச்சைக்கு முன்னால்
மதிபெண் கண்டு வருந்தியதில்லை பின்னால்
துயரங்கள் கண்டு துவண்டதில்லை
நண்பர்கள் என்றும் பிரிந்ததில்லை
மரத்தடி பேச்சுகள் மறக்கவில்லை
இறக்கும் வரை அழிய போவதுமில்லை
எல்லாம் நடந்தது அன்று
நினைவில் கலந்து நிற்கின்றன இன்று
நிற்கும் என்றென்றும்
1 comment மார்ச் 28, 2008