Archive for பெப்ரவரி, 2008

பல்வகை மனிதர்கள்

தமிழ் வலைப்பதிவில் எதாவது அடித்து வெகு நாட்கள் ஆகி விட்டது. அடிப்பதற்கு நேரமும் கிடைப்பதில்லை, பகிர்ந்து கொள்வதற்கு பெரிதாக எதுவும் நடக்கவும் இல்லை. சரி நடந்து முடிந்தது எதாவது பற்றி அடிக்கலாம் என்று நினைத்தேன. கிடைத்தது இது தான். ஒரே நாளில் நடந்த இரண்டு சம்பவங்கள பற்றி தான் இது.

ஓரு நாள் திருத்தங்கல் சென்று இருந்தேன். கோவிலுக்கு செல்லும் முன் செருப்பு வைக்கும் இடம் இல்லை என்பதால் ஒரு கடையில் வி்ட்டு விட்டு சென்றோம். தரிசனம் முடிந்து வந்து செருப்புகளை எடுத்துவிட்டு அந்த கடை காரருக்கு ஐந்து ரூபாய் கொடுத்தோம். வாங்க மறுத்து விட்டார். “நான் இதற்காக இந்த வேலையை செய்யவில்லை” என்றார், சரி என்று இரண்டு விளக்குகள் வாங்கி விட்டு வந்து விட்டோம்.

விருதுநகரில் சாப்பிடலாம் என்று நினைத்து இறங்கினோம், அங்கேயும் ஒருவர். நன்றாக தான் இருந்தார், எங்கள் அருகே வந்து காசு கேட்டார். இரண்டு ரூபாய் கொடுத்தோம், இரண்டு ரூபாய் போதாது என்று அடம் பிடித்தார். எங்கு சென்றாலும் பின்னாடியே வந்து தொல்லை பன்னினார். ஆனால் நாங்கள் எதுவும் கொடுக்க வில்லை, இடத்தை காலி செய்து விட்டு கிள்ளம்பிவிட்டோம்.

முதல் சொன்ன மனிதர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம். விருதுநகரில் பார்த்தவர் எப்படி இருக்க கூடாது என்பதற்கு.

Add comment பெப்ரவரி 10, 2008


 

பெப்ரவரி 2008
தி செ பு வி வெ ஞா
« Dec   மார் »
 123
45678910
11121314151617
18192021222324
2526272829  

அண்மைய இடுகைகள்

பக்கங்கள்

வகைகள்